திருவண்ணாமலையில் இன்று கிரிவலம்.. சிறப்பு சொகுசு பேருந்துகள் ஏற்பாடு..!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (14:27 IST)
திருவண்ணாமலையில் இன்று கிரிவலத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் 20 சொகுசு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாகவும் இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்ய போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
 
திருவண்ணாமலையில் கிரிவலம் இன்று அதாவது செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.56 மணி முதல் நாளை காலை 6 மணி வரை செல்லலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்