வெள்ளத்தில் சிக்கி நடுவழியில் நிற்கும் 25 பேருந்துகள்: பயணிகளுக்கு உதவும் கிராம மக்கள்!

செவ்வாய், 19 டிசம்பர் 2023 (16:01 IST)
திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் மார்க்கத்தில் 25 பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கி உள்ள நிலையில் அந்த பகுதி கிராம மக்கள் பேருந்தில் உள்ள பயணிகளை காப்பாற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி செல்லும் வழியில் 25க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது

பேருந்தில் பயணித்து வந்த பயணிகளை உள்ளூர் மக்கள் காப்பாற்றி தங்குமிடம் உணவு ஆகிவிட்டதை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீட்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று 25 பேருந்துகளில் உள்ள பயணிகளை பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்