சென்னையில் சந்திர கிரகணத்தை காண பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடு!

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (15:57 IST)
இன்று இரவு நிகழும் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காண சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
21ஆம் நூற்றாண்டின் மிக பெரிய சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் அமெரிக்காவை தவிர மற்ற எல்லா பகுதிகளில் தெரியும். குறிப்பாக ஆசியப் பகுதிகளில் நன்றாக தெரியும். இதனால் இந்தியாவிலும் இன்று இரவு நிகழ உள்ள சந்திர கிரகணத்தை காணலாம்.
 
இந்த சந்திர கிரகணம் இன்று இரவு 11.54 மணி அளவில் தொடங்கி மறுநாள் காலை 2.43 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிற சந்திர கிரகணம் 103 நிமிடங்கள் வரை காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காண சென்னை பிர்லா கோளரங்கம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் இரவு 10.00 மணி முதலே பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்