சந்திர கிரகணத்தின் தீய தாக்கத்தில் இருந்து காக்கும் மந்திரம்...!

சந்திரன் 16 நாட்கள் தேய்ந்தும் 16 நாட்கள் வளர்ந்தும் இந்த பூமிககுகி இரவில் வெளிச்சம் தருகிறார். மாதம் தோறும் வரும் அமாவாசை, பெளர்ணமி எப்படி சில  சிறப்புக்கள் உண்டோ, அதேபோல சந்திர கிரகணத்திற்கும் சில சிறப்புக்கள் உண்டு.

அதே வேளையில் சில கெடுதலான பலன்களும் கிரகணத்தால் ஏற்படும்.  கிரகண வேளையில் சந்திரனின் மீது விழும் பூமியின் நிழம் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகும்.
 
சந்திர கிரகணம் நிகழும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜையறையில் நெய் தீபம் ஏற்றி சாப்பிராணி தூபம் போட்டு, சந்திர  பக்வானை மனதில் நினைத்து சந்திர கிரகண மந்திரத்தை 108 முறை கூறி வழிபடவேண்டும். மேலும் இரவில் சந்திர கிரகணம் நிகழும் வேளையில் ஒரு சுத்தமான துணியை கீழே விரித்து, அதில் அமர்ந்து வலது கையில் தர்ப்பை புல் கட்டை பிடித்துகொண்டு இம்மந்திரத்தை கண்களை மூடி தியான நிலையில்  வாய்விட்டோ அல்லது மனதிற்குள் சொல்லவேண்டும்.
 
சந்திர கிரகண மந்திரம்: ஆம் ஐம் க்ளீம் ஸோமாயா நமஹ.
 
சந்திர கிரகணம் நீடிக்கும்வரை அந்த நிழலானது பூமியில் வாழும் உயிர்களின் மீது ஒரு விதமான ககெடுதலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே மனிதர்களாகிய நாம் இம்மந்திரத்தை கூறுவதால் கிரகணத்தின் தீய தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்