சென்னையில் சாக்லேட் திருடிய பெண் காவலர் சஸ்பெண்ட்

வியாழன், 26 ஜூலை 2018 (12:04 IST)
சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள பிரலமான சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க  வேப்பேரி காவல் நிலைய பெண் காவலர் ஒருவர் சென்றிருந்தார். அங்கு அவர் பொருட்களை எடுத்து கொண்டிருந்தபோது சாக்லேட்கள், ஓடோமாஸ் ஆகியவற்றை திருடியதாக தெரிகிறது. உடனே அந்த சூப்பர் மார்க்கெட்டின் சிசிடிவி மூலம் இந்த திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தான் பொருட்களை திருடியதை அந்த பெண் காவலர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெண் காவலர் தனது கணவர் மற்றும் சிலருடன் வந்து சூப்பர் மார்க்கெட் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஊழியர்களை பெண் காவலரின் கணவர் தாக்கிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து காவல்துறை ஆணையரிடம் சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் புகார் அளித்தனர். இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்த சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட் திருடிய பெண் காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். திருடர்களை கண்டுபிடிக்க வேண்டிய காவலர்களே திருடிய விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்