பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை...ரசிகர்கள் அதிர்ச்சி

புதன், 22 ஜூன் 2022 (15:30 IST)
ஒடிசா மாநில தொலைக்காட்சி நடிகை இன்று தூக்கிட்டு தற்கொலை செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மா நிலம்  தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஷ்மிரேகா ஓஜா(23). இவர் நயபள்ளி பகுதியில் உள்ள கடசாஹியில் ஒரு வாடலை வீட்டில் தனது காதலர் சந்தோஷ் பத்ராவுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

கடந்த   ஞாயிற்றுக்கிழமை  ( ஜூன்19) ரஷ்மிரேகா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அந்த வீட்டு உரிமையாளர் இதுகுறித்து போலீஸுக்கு தகவல் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் நடிகையின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  நடிகை ரஷ்மிரேகா தங்கியிருந்த அறையில் ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதில், ஐ லவ் யூ பேபி, என்று தனது காதலர் பெயரை குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்