தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள்.. தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

Siva

வெள்ளி, 24 மே 2024 (07:14 IST)
தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதை அடுத்து தமிழகத்தில் கூடுதலாக மருத்துவ மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால் தமிழகத்திலிருந்து அதிக மருத்துவ மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பதும் இதன் காரணமாகத்தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே தமிழகத்தில் சில மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்போது 6 புதிய மருத்துவக் கல்லூரியில் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்