ஆட்டோக்களில் பள்ளி மாணவர்கள் செல்ல தடையா? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை..!

Mahendran

சனி, 11 மே 2024 (16:57 IST)
ஆட்டோக்களில்  பள்ளி மாணவர்கள் செல்ல தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஜூன் மாதம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் பள்ளி வாகனங்கள் தற்போது அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும் பள்ளி பேருந்துகளில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு செல்வதால் விபத்து ஏற்படுகிறது என்றும் இதனால் எதிர்பாராத உயிரிழப்பு ஏற்படுகிறது என்று பல புகார்கள் வந்துள்ளன. 
 
இந்த நிலையில் இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை செய்து வருவதாகவும் அனேகமாக ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை ஏற்ற தடை என்ற அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்