வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 5 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Mahendran

சனி, 11 மே 2024 (15:36 IST)
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், அடுத்த 5 நாட்கள் மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்தி கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆங்காங்கே மிதமான மழை முதல் லேசான மழை வரை பெய்து வருகிறது என்பதும் அதனால் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என கூறியுள்ளது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் தொடர்ந்து வறண்ட வானிலேயே இருக்கும் என்றும் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்