ஏஐ பாடப் பிரிவில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்.. வணிகவியல் படிப்புக்கும் டிமாண்ட்..!

Siva

சனி, 11 மே 2024 (16:25 IST)
பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அதிக அளவில் ஏஐ பாடங்களில் சேர ஆர்வம் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் தற்போது விண்ணப்பித்து வரும் நிலையில் அதிக அளவிலான மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் விண்ணப்பித்து வருகின்றனர் என்றும் இந்த படிப்புக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது ஏஐ பட்டதாரிகளை தேடி வருகின்றன என்றும் அதனால் இந்த படிப்புக்கு திடீரென டிமாண்ட் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வணிகவியல் படிப்புக்கும் நல்ல டிமாண்ட் உள்ளதாகவும் ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற கனவு பல மாணவர்களிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது

பிகாம் என்றாலே குறைவான படிப்பு என்ற ஒரு காலத்தில் நினைத்து கொண்டிருந்த நிலையில் தற்போது பிகாம் படிப்புகளில் சேர அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்ற நேரம் மற்றும் பிகாம் படிப்புகளுக்கு அதிக மாணவர்கள் சேர்ந்து வரும் நிலையில் அறிவியல் பாடங்களுக்கு அதாவது கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு குறைவான மாணவர்களே விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்