உலக சுகாதார நிறுவனம் எச்சரித்த பின்னரும், தமிழக அரசு அலட்சியமாக இருந்ததால்தான் உயிரிழப்புகள் நேர்ந்தன. காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்துதான் இந்த 25 குழந்தைகள் பலியாக காரணம்.
சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் மீது முறைகேடு கண்டறியப்பட்டு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு அந்த நிறுவனத்தில் சோதனை செய்ய தவறிவிட்டது. இதனால் மருந்து உற்பத்தியை கண்காணிக்காமல் விட்டதால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.