அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்: முக்கிய அறிவிப்பு..!

Mahendran

செவ்வாய், 14 மே 2024 (18:28 IST)
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பிளஸ் டூ மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பினால் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை ஜூன் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்