அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

Prasanth Karthick

திங்கள், 20 மே 2024 (09:46 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் பலரும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த நிலையில் சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. அதை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியானது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக அப்ளை செய்ய முடியும்.

www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று பெயர், மதிப்பெண் மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்து கல்லூரி தேர்வில் சேர விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்து விண்ணப்பித்தால் கல்லூரி சேர்க்கைக்கு ஃபோன் மூலமாக மாணவர்கள் அழைக்கப்பட்டு கவுன்சிலிங் செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆன்லைன் விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் விரைந்து இன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்