நாங்குநேரி சம்பத்தில் திமுக கண்டிக்க திராணியில்லை.. திருமாவளவன் குறித்து பாஜக பிரமுகர்..!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (15:29 IST)
நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து அரசியல்வாதிகளும் சரி திரையுலக பிரபலமும் சரி ஒருவர் கூட திமுக அரசை கண்டிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திருமாவளவனும் திமுக அரசை கண்டிக்காமல் இது ஆர்எஸ்எஸ் சதி என்று கூறி இருப்பது வருந்தத்தக்கது என பாஜக நிர்வாகி எஸ் ஜே சூர்யா தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் நிழலும் கூறியிருப்பதாவது: நாங்குநேரியில் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை வீடு புகுந்து கொடூரமாக வெட்டி சென்றதை கண்டித்து உடனே பெருந்தெரு மக்கள் சாலை மறியல் செய்ததாகவும், அப்போது “போங்க போங்க ரோட்டை மறிக்காதீங்க; ஏதோ சின்னபயலுவ வெட்டிட்டானுவ; எல்லாம் காலையில பேசி தீர்த்துக்கலாம்” என தி.மு.க, ம.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் அதிகாரத் திமிரோடு பேசி கட்ட பஞ்சாயத்து செய்ய முயற்சித்த போது காவல்துறை வேடிக்கை பார்த்ததாகவும், வி.சி.க எதிர்ப்புக்கு பின்னரே அப்பகுதியில் இருந்து நகர்ந்து செல்கிறார்கள் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் திரு.முருகன் கண்ணா சொல்கிறார்.
 
துளிக்கூட தொடர்பின்றி நாங்குநேரி சம்பவத்திற்கு ஆர்.எஸ்.எஸ் பேரியக்கத்தை தொடர்புபடுத்தி பேசும் திரு. திருமாவளவன் எம்பி அவர்களால் தி.மு.க-வை கண்டிக்க முடியவில்லை, திராணியும் இல்லை என்பது திரு.திருமாவளவனின் கையாலாகாத்தனத்தையும், கோழைத்தனத்தையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசியலில் குறைந்தபட்ச நேர்மையையும், அறத்தையாவது பின்பற்றும் வழியை தேடுங்கள் திரு.திருமாவளவன்’ என்று எஸ்ஜே சூர்யா பதிவு செய்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்