சமூக வலைதளங்களில் பிரபலமான ஜி.பி.முத்துவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பிரபலமானவர்களில் முக்கியமானவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து தனி யூட்யூப் சேனல் தொடங்கி பிரபலமான நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, குக் வித் கோமாளி உள்ளிட்டவற்றில் பங்கேற்றார். தற்போது பல படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஜி.பி.முத்து தனது ஊரான உடன்குடி காவல்நிலையத்தில் நூதன புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது ஊரில் உள்ள கீழத்தெருவை காணவில்லை என அவர் புகார் அளித்திருந்தார். அங்குள்ள சிலரோடு அவருக்கு முட்டல் மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் சிலர் ஜி.பி.முத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளனர்.
இதனால் ஜி.பி.முத்துவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K