சமீபத்தில், இந்தியாவின் தாக்குதல் காரணமாக தீவிரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 14 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரண நிதியாக பாகிஸ்தான் அரசு 14 கோடி ரூபாய் அந்த குடும்பத்திற்கு வழங்க ஒப்புதல் வழங்கி இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலில், தீவிரவாதி மசூத் அசார் தப்பியிருந்தாலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, அவர்களது உறவினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம், மொத்தமாக 14 கோடி ரூபாய் வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, மசூத் அசாரின் குடும்பத்தில் அவர் ஒருவர் மட்டுமே உயிரோடிருப்பதால், இந்த 14 கோடி ரூபாயும் அவருக்கே செல்ல வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் தீவிரவாதம் மேலும் வளர வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுவது புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.