மோடி பிரதமராக இருந்தால் எல்லாமே சாத்தியம்.. விடுதலையான பிஎஸ்எப் வீரர் மனைவி நெகிழ்ச்சி..!

Siva

புதன், 14 மே 2025 (17:10 IST)
மோடி பிரதமராக இருந்தால் எல்லாமே சாத்தியம்," என்றும், "அவருக்கு நான் மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன்," என்றும் பாகிஸ்தானில் இருந்து விடுதலையான பிஎஸ்எப் வீரர் பூர்ணம் ஷாவின் மனைவி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பூரணம் குமார் ஷா என்பவர் எல்லையில் பணி செய்து கொண்டிருந்தபோது, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில் இந்தியா நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக இன்று அவர் விடுதலையானார்.
 
இந்த நிலையில், பூரணம் குமார் ஷாவின் மனைவி ராஜனி ஷா, இது குறித்து கூறியதாவது: "மோடி பிரதமராக இருக்கிறார் என்றால் எல்லாமே சாத்தியம்தான். ஏப்ரல் 22 ஆம் தேதி பகல்காம் தாக்குதலுக்கு பிறகு, 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பலியான அனைவரின் ஆத்மா சாந்தி அடையும் வகையில் பழி வாங்கினார். சில நாட்களிலேயே எனது கணவரையும் திருப்பிக் கொண்டு வந்தார்."
 
"எனவே, என் இரு கைகளையும் கூப்பி அவருக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி பிரதமராக இருக்கிறார் என்றால் எதுவும் சாத்தியம்தான். அதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது," என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
 
இந்த பேட்டி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்