விஜய்யையும் என்னையும் ஒப்பிட வேண்டாம். அவருக்கு 50 வயது, எனக்கு 33 வயது தான். ஆனால் அதே நேரத்தில், "அரசியலில் என்னை விட நீங்கள் சீனியர்," என்று விஜய் பெருந்தன்மையாக கூறியதாகவும், அதை நான் பெருமையாக கருதுகிறேன் என்றும் சமீபத்தில் பேட்டி அளித்த விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
"விஜய்யை நான் ஒரு சில முறை நேரில் சந்தித்துள்ளேன். ஆனால் அதே நேரத்தில், அவருடைய கட்சியுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை," என்றும் அவர் கூறினார். கூட்டணி குறித்து, "விஜய் கட்சிக்கு உட்பட அனைத்து கட்சி தலைவர்களிடமும் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம்," என்றும் தெரிவித்துள்ளார்.
நீங்களும் விஜய்யும் இளைஞர்கள். அரசியலில் என்ன சாதிப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "விஜய்க்கு 50 வயது, எனக்கு 33 வயது. அவருக்கு சினிமாவில் அனுபவம் அதிகம். அவரை என்னோடு ஒப்பிட வேண்டாம். நான் அரசியலில் சீனியர்," என்று அவர் பெருந்தன்மையாக கூறினார்.
அவர் பின்னால் பல லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதும், பல லட்சம் இளைஞர்கள் எங்கள் கட்சியிலும் இருந்தார்கள். இருவருமே நாட்டிற்கு நல்லது செய்வோம், என்று விஜய் பிரபாகரன் தெரிவித்தார்.