பெரியார் சிலையை உடைத்தவர் திமுகவை சேர்ந்தவரா?

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (04:07 IST)
புதுக்கோட்டை அருகே ஆலங்குடி என்ற இடத்தில் இருந்த பெரியார் சிலை சமீபத்தில் உடைக்கப்பட்டதால் பெரியார்களின் பேரன்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ஆவேசமான கருத்துக்களை கூறியிருந்தனர்

இந்த நிலையில் பெரியார் சிலையை உடைத்தது செந்தில்குமார் என்ற சி.ஆர்.பி.எப் வீரர் என்பதும், அவர் மதுபோதையில் பெரியார் சிலையை உடைத்தார் என்பதும் சிசிடிவி கேமிரா காட்சிகளின் மூலம் தெரிய வந்தது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி செந்தில்குமார் திமுகவின் உறுப்பினர் என்று கூறப்படுகிறது.

ஆக, பெரியார் சிலையை திமுகவினரே உடைத்துவிட்டு திமுகவினரே போராட்டம் நடத்துவது அநாகரித்தின் உச்சக்கட்டம் என சமூக வலைத்தளங்களில் திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் பதிவாகி வருகிறது. இதுகுறித்து எச்.ராஜா கூறியபோது, 'புதுக்கோட்டையில் பெரியார் சிலையை உடைத்த வழக்கில் கைதான செந்தில்குமார் திமுகவை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்