சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைப்பு சம்பவத்தில் ஆரம்பித்த சிலை உடைப்பு விவகாரம் தமிழகத்தின் பெரியார் சிலை உடைப்பு வரை நீண்டுகொண்டே இருந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் குஜராத்தில் உள்ள இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அவமரியாதை செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில், நேற்றிரவு இந்த சிலைக்கு காலி குளிர்பான பாட்டில்கள் மற்றும் புல் ஆகியவற்றால் ஆன மாலையை சில மர்மநபர்கள் அணிவித்து அவமரியாதை செய்துள்ளனர். காலை எழுந்தவுடன் இந்த அவமரியாதையை கண்ட கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்து அந்த மாலையை அகற்றியதுடன் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.