இதனையடுத்து தமிழகமெங்கும் நேற்று போராட்டம் வெடித்தது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் தங்களது கண்டணங்களை பதிவிட்டனர். போராட்டகாரர்கள் சிலையை உடைத்தவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து கைதுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சிலையை உடைத்தவர்களை நிச்சயமாகக் கண்டுபிடித்துக் கைதுசெய்வோம் என போலீஸார் உறுதியளித்தனர்.
இந்நிலையில் போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் விசாரணை நடத்தியதில், பெரியார் சிலையை சேதப்படுத்தியது செந்தில்குமார் என்றும் அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப்பிடித்து விசாரித்ததில் மதுபோதையில் சிலையை சேதப்படுத்தியதாக தெரிவித்தார். செந்தில்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.