பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் ரோஹிங்கியா அகதிகள் சிறுமிகள்

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (03:05 IST)
சமீபத்தில் மியான்மர் நாட்டில் உள்ள ரோஹிங்கியா இன முஸ்லீம் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதால் பெரும்பாலான ரோஹிங்கிய இன மக்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் வங்கதேச அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கியா சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன

இதுகுறித்து தனியார் உளவு நிறுவனம் ஒன்று அகதிகள் முகாமுக்கு சென்று திரட்டிய தகவல்கள் திடுக்கிட வைப்பதாக உள்ளது. பெற்றோர்களை இழ்ந்த 10 முதல் 15 வயது சிறுமிகள் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து செல்லும் உள்ளூர் மக்கள் சிலர், அந்த சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளி, லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக திடுக்கிடும் தகவலை அந்த உளவு நிறுவனம் கூறியுள்ளது

இதுகுறித்து உடனே வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்