அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கல்லூரிகள்! – சேகர் பாபு அறிவிப்பு!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:29 IST)
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்டு தமிழகம் முழுவதும் கல்லூரிகள் கட்ட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. இதுவரை பல்வேறு கோவில் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு “சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பார். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கோவில்களில் பல கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலங்களை மீட்டு தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்ட திட்டமிட்டுள்ளோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்