விரைவில் உள்ளாட்சி தேர்தல்; திமுகவுக்கு வெற்றி உறுதி! – மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!

புதன், 4 ஆகஸ்ட் 2021 (14:55 IST)
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதுகுறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றி பெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறாது.” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்