இனிமேல் நாங்களும் ரஜினியை கொண்டாடுவோம்! – பல்டி அடித்த சீமான்!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (13:59 IST)
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட்ட நிலையில் ரஜினி குறித்து கடுமையாக பேசியதற்கு வருந்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில், உடல்நலம் காரணமாக கட்சி தொடங்கும் திட்டத்தை கை விடுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் கட்சி தொடங்காததால் அவரது தார்மீக ஆதரவை பெற அரசியல் கட்சிகள் பல முயற்சித்து வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து 2017ல் அறிவித்த நிலையில் கடந்த ஆண்டுகளில் ரஜினிகாந்தை அரசியல் ரீதியாக அதிகம் விமர்சித்து வந்தவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். தற்போது ரஜினியின் அரசியல் முடிவு குறித்து பேசியுள்ள சீமான் “நடிகர் ரஜினி இந்திய சினிமாவின் ஒப்பற்ற கலைஞர். அவர் பூரண நலத்துடன் தனது கலையுலக வாழ்வை தொடர வேண்டும். அரசியல்ரீதியாக மட்டுமே ரஜினிகாந்தை விமர்சித்தோம். அவர் மீது எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை. அரசியல் ரீதியாக ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்திருந்தால் வருந்துகிறேன். இனி நாம் தமிழர் பிள்ளைகளும் ரஜினிகாந்தை கொண்டாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்