நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம், மகராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட தடைகள் விதிக்கப்பட்டுள்ளம.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்கள், மெரினா கடற்கரையில் கூடுதல் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் மதுபான பார்களை நாளை இரவு 10 மணி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல நாளை இரவு 10 மணி முதல் மெரினா கடற்கரை மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.