அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர்: விலகாத மர்மம்!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (10:04 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக பங்களா ஒன்று கொடநாட்டில் உள்ளது. ஜெயலலிதா அடிக்கடி ஓய்வுக்கு செல்லும் இடம் இந்த கொடநாடு எஸ்டேட் தான். ஜெயலலிதா இருக்கும் போதே அந்த பங்களா மர்மமான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னரும் அங்கு மர்மமான சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது. அனைத்து வசதிகளும் அடங்கிய ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நுழைய மொத்தம் 11 நுழைவு வாயில்கள் உள்ளன. ஆனாலும் யாரும் அங்கு எளிதில் நுழைந்துவிட முடியாது. அந்த அளவுக்கு கெடுபிடி.


 
 
இந்த எஸ்டேட்டில் சுமார் 500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்த ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் கட்டிப்போடப்பட்டிருந்தார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கிஷன் பகதூரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மமே இன்னமும் விலகாத நிலையில் அவரது கொடநாடு எஸ்டேட்டின் காவலர் மர்மமான முறையில் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்