ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி வாய்ப்பே இல்லை: நிதியமைச்சர் பதவி வேண்டுமானால் தரலாம்!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (09:11 IST)
அதிமுகவில் சசிகலாவின் ஆதிக்கத்துக்கு பின்னர் அந்த கட்சி இரண்டாக பிளவு பட்டு நிற்கிறது. அதன் தொடர்ச்சியாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது.


 
 
இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் இல்லாமல் அதிமுகவின் இருண்டு அணிகளும் தேர்தலை சந்தித்ததால் தோல்வி தான் மிச்சமாக கிடைக்கும் என இரண்டு அணிகளுக்கும் தெரியும்.
 
இதனையடுத்து இரண்டு அணிகளும் இணைவது குறித்தான பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஆனால் ஓபிஎஸ் அணி சில நிபந்தனைகள் வைப்பதால் பேச்சுவார்த்தை நடைபெறாமல் தடையாக உள்ளது.
 
முதலமைச்சர் பதவி, பொதுச்செயலாளர் பதவி இந்த இரண்டும் தான் ஓபிஎஸ் அணியால் வைக்கப்படும் பிரதான கோரிக்கை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எடப்பாடி தரப்பு முதலமைச்சர் பதவியை விட்டுத்தருவதற்கு தயாராக இல்லை எனவே தகவல்கள் வருகின்றன.
 
இந்நிலையில் இதனை பிரதபலிக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சேத்துப்பட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். ஓபிஎஸ்-க்காக எனது நிதியமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக கூறினார். அப்படியென்றால் ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி தர முடியாது என மறைமுகமாக கூறுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
அடுத்த கட்டுரையில்