பேசுறதுக்கு டைம் தர மாட்றாங்க! – வெளிநடப்பு செய்த திமுக!

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (11:33 IST)
குடியுரிமை சட்டம் குறித்து பேச சட்டசபையில் நேரம் ஒதுக்காததால் திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக அரசின் 2020ம் ஆண்டு சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. அதில் தொடக்க உரை ஆளுனர் வாசித்தபோது திமுகவினர் குடியுரிமை பற்றி பேச அவகாசம் கேட்டனர். ஆனால் நேரம் ஒதுக்கப்படாததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று சட்டசபை கூடிய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியதுடன் தான் மனு அளித்திருப்பதாகவும் கூறினார்.

ஸ்டாலின் கொடுத்த மனு ஆய்வில் உள்ளது என சபாநாயகர் கூறிய பிறகும், பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம் தேச ஒருமைபாட்டுக்கு உகந்தது அல்ல. நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் ஸ்டாலின் வலியுறுத்தலை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால் திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்