மறைமுக தேர்தலுக்கு மசோதா தாக்கல்: அமளியில் ஈடுபடுமா எதிர்க்கட்சிகள்?

செவ்வாய், 7 ஜனவரி 2020 (09:01 IST)
உள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலுக்கான சட்ட திருத்த மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணும் பணிகள் நடந்து முடிந்த நிலையில் நேற்று தமிழக சட்டசபை கூடியது.

இந்நிலையில் இன்று உள்ளாட்சி அமைப்பின் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான சட்டதிருத்த மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பிறகே நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெறும்.

இன்று தாக்கல் செய்யப்படும் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. நேற்று ஆளுனர் உரையை புறக்கணித்து திமுக, அமமுக கட்சிகள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்