மார்ச் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (11:33 IST)
வரும் மார்ச் 7ம் தேதி புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை அரசின் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் திருவிழா மிகவும் விசேஷமாக தமிழகம் மற்றும் புதுவையில் கொண்டாடப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டு மாசி மகாத் திருவிழா வரும் மார்ச் 7ஆம் தேதி விசேஷமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மாசி மகா திருவிழாவை ஒட்டி மாசி 7ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிளஸ் ஒன் பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருப்பதை அடுத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
புதுவை மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் விடுமுறை அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்