மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

வியாழன், 2 மார்ச் 2023 (17:11 IST)
ஒரு சில உள்ளூர் விசேஷங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உண்டு என்பது தெரிந்ததே. அவ்வப்போது உள்ளூர் விடுமுறை குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமி அவதார தினம் மார்ச் 4-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அய்யா வைகுண்டசாமி அவர்களை 191 வது அவதார நினைவு தினத்தை ஒட்டி மாநில அரசு அலுவலக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த விடுமுறைக்கு பதிலாக வேறு ஒரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்