பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணி நேரம் மாற்றம்..!

Webdunia
புதன், 10 மே 2023 (17:44 IST)
பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணி நேரத்தை மாற்றி அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் தற்போது  காலை 10 மணி முதல் மாலை 5. 45 மணி வரை பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் இந்த பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் காலை 9 மணி முதல் மாலை 4. 45 மணி வரை உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் பணி புரிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணி நேர மாற்றத்திற்கு உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்