பெற்றோர் ஆசிரியர் கழக நிதி… எவ்வளவு வசூலிக்க வேண்டும்!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (08:33 IST)

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ‘மாணவர் சேர்க்கையின்போது பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியாக 50 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது. மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. மேலும், 5 வயது குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் சேர்ந்திருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதுபோன்று, தங்களது பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்பதாம் வகுப்பைத் தொடர்கிறார்களா என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்