தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

Prasanth K

ஞாயிறு, 15 ஜூன் 2025 (12:11 IST)

இன்று தந்தையர் தினத்தையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

 

பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கும்போதெல்லாம் அன்புமணியை அவரது தந்தையார் ராமதாஸ் பலவாறாக விமர்சித்தும், கண்டித்தும் வருகிறார்.

 

சமீபத்தில் ஒரு பேட்டியின்போதும், அன்புமணி கட்சி தலைவர் பதவிக்காக போட்டிப் போடுவதாகவும், தான் உயிரோடு இருக்கும் வரை நான் தான் தலைவர் என்றும் ராமதாஸ் பேசி வந்தார்.

 

இந்நிலையில் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ் “தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! 

 

தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்.

ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், 

அன்பாக வளர்ப்பது  தந்தையரின் திருப்பணி.

தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!” என்று கூறியுள்ளார்.

 

அதன் கமெண்ட் பிரிவில் உள்புகுந்துள்ள நெட்டிசன்கள் பலர் பாமகவில் இருவரிடையே உள்ள மோதல் நிலையையும், அன்புமணியின் தந்தையர் தின பதிவையும் இணைத்து பல கமெண்டுகளை இட்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்