தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் மாநிலத்திலேயே அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக சென்னையில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 455 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது