நீட் தேர்வால் பாதிப்பு… பொதுமக்கள் கருத்தில் அனிதாவின் தந்தை!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (08:26 IST)
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு நீட் தேர்வு மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா எனவும் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தால் இதற்கான மாற்று நடவடிக்கைகள் என்னவெனவும் ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்டு உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குழு தற்போது neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை வழங்கி, இதில் நீட் குறித்த கருத்துக்களை மக்கள் வரும் 23 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து நீட் தேர்வால் மருத்துவர் ஆக முடியாமல் உயிரிழந்த அனிதாவின் தந்தை இதில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் குழுவின் தலைவர் ஏ கே ராஜனுக்கு கடித எழுதியுள்ளார். அதில்  ‘1200க்கும் 1176 மதிப்பெண்கள் பெற்ற அனிதாவுக்கு மருத்துவம் படிக்க தகுதி இல்லை எனக் கூறிவிட்டு, நீட் தேர்வில் 720  மதிப்பெண்ணுக்கு 150 மதிப்பெண்கள் எடுத்தவர்களை பணமிருந்தால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை வழங்குகின்றனர்’ எனக் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் சூர்யா தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்