கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

Siva

புதன், 22 அக்டோபர் 2025 (08:14 IST)
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
 
இதன் காரணமாக இன்று சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருச்சி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்