கரூர் துயர சம்பவ விவகாரம்.. சிபிஐ-க்கு உதவ பெண் ஐ.ஜி உள்பட 2 அதிகாரிகள் நியமனம்.

Siva

புதன், 22 அக்டோபர் 2025 (08:29 IST)
கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
 
இந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உதவி செய்வதற்காக ஒரு பெண் ஐஜி உட்பட 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான சுமித் சரண் மற்றும் சோனல் மிஸ்ரா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
சுமித் சாரன் சி.ஆர்.பி.எஃப் டெல்லியில் பணிபுரிந்து வருகிறார் என்பதும், சோனல் மிஸ்ரா எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் கரூர் துயர சம்பவத்திற்கு சிபிஐக்கு உதவி செய்வார்கள் என்றும், விசாரணை மிக துரிதமாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
 
முன்னதாக, சிபிஐ விசாரணை வேண்டும் என்ற 'தமிழக வெற்றி கழகத்தின்' கோரிக்கையை ஏற்று, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்