செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து நேற்று இருந்த 1800 கன அடிகளிலிருந்து இன்று 20170 கன அடியாக அதிகரித்துள்ளது. 24 அடி மொத்த நீர்மட்டத்தில் தற்போது 20 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளதாகவும், இதன் காரணமாக ஏரியில் தற்போது 2.8 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளதாகவும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் ஐந்தாவது தெருவில் வேரோடு ஒரு மரம் சாய்ந்ததை அடுத்து அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்ததாகவும், மரத்தை அகற்றும் பணியிலும், மின்கம்பத்தை சரி பார்க்கும் பணியிலும் ஊழியர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.