பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு எட்டப்படாமல் கடுமையான முரண்பாடு நிலவுகிறது. இதன் விளைவாக, கூட்டணிக்குள் உள்ள கட்சிகளே 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதில் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு தயக்கம் இருப்பதும், அதிக இடங்களை கேட்டு நிர்ப்பந்தித்ததும் பிளவுக்கு முக்கிய காரணங்கள். வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரும் 'இந்தியா' கூட்டணி தொகுதி பங்கீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதற்கிடையே, ஜார்க்கண்டில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, பீகாரில் உரிய இடங்கள் ஒதுக்கப்படாததால், 'இந்தியா' கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து, தனித்து போட்டியிட போவதாகவும் எச்சரித்துள்ளது.