10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்? வானிலை எச்சரிக்கை..!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பத்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்குக் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால், மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.