சாத்தான்குளம் சம்பவம்; விசாரணைக்கு ஒத்துழைக்காத காவலர்கள்! – கோர்ட் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (12:47 IST)
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் காவல்நிலையத்தினர் முழுமையான ஒத்துழைப்பு தராததால் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்திய பென்னிக்ஸ் ராஜ் மற்றும் அவரது தந்தை ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் தாக்கியதாலேயே அவர்கள் மரணித்ததாக பலர் போராட்டம் நடத்திய நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக போதிய தரவுகளை தராத நிலையில், விசாரணைக்கும் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள் சரியான ஒத்துழைப்பு நல்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. அங்குள்ள பதிவேடுகளில் தகவல்களை திரட்டுவதுடன், தடவியல் நிபுணர்களை கொண்டு காவல்நிலையத்தில் ஆதாரங்களை சேகரிக்கவும் மதுரை கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்