தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. இந்நிலையில் இன்று முந்தைய நாட்களை விட விலையேற்றம் குறைவான அளவில் உள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து ரூ.83.63க்கும், டீசல் லிட்டருக்கு 11 பைசா உயர்ந்து ரூ.77.72க்கும் விற்பனையாகி வருகிறது.