ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் ரவுண்ட் அடிக்கும் சசிகலா!!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (12:20 IST)
சசிகலா தனது பயணத்திற்கு ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். 

 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அவரின் 114 ஆவது ஜெயந்தி விழாவும், 56 ஆவது குருபூஜை விழாவும் நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் இணைச் செயலாளர் சரவணன், அதிமுக மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர், ஒன்றிய மாணவரணி செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து இன்று முத்துராமலிங்கனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 
 
இவர்களுடன் சசிகலாவும் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சசிகலா தனது பயணத்திற்கு ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்