கை கொடுக்காத முதலுதவி: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் சசிகலா?

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (16:38 IST)
மருத்துவமனைக்கு சசிகலாவை கொண்டு செல்லும் பணியில் சிறைத்துறை உள்ளதாகவும் தகவல். 

 
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 27 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.  
 
ஆனால் இப்போது சசிகலா விடுதலை குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிகலா விடுதலை ஆகிறார் என கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
இதனிடையே சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி முதலில் முதலுதவி வழங்கப்பட்டதாகவும் அது பலன் அளிக்காததால் மருத்துவமனைக்கு சசிகலாவை கொண்டு செல்லும் பணியில் சிறைத்துறை உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்