சிறையில் சசிகலாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் !

புதன், 20 ஜனவரி 2021 (16:00 IST)
பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்குத்தொடர்பாக சசிகலா அவரது உறவினராக இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு 4 ஆண்டு காலத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்களுக்கான தண்டனை அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்தாலும் அவரைப் பற்றிய பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் உலா வந்துகொண்டிருந்தது. அவர் எப்போது விடுதலை ஆவார் என அமமுகவினர் எதிர்பார்த்து வந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் ஜெயலலிதாவின் தோழியும் தினகரனின் உறவினருமான சசிகலா வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளார் என கர்நாடக சிறைத்துறை அறிவித்ததாக நேற்று ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வரும்  சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு சிறைக்கு விரைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்