அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன்: சசிகலா அறிவிப்பால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சி

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (13:52 IST)
நேரம் வரும்போது அதிமுக அலுவலகம் செல்வேன் என்று சசிகலா கூறியிருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அண்ணாவின் பிறந்த நாளன்று அதிமுகவே ஒருங்கிணைக்க உறுதி கொண்டு உள்ளோம் என்று கூறியுள்ளார்
 
அதிமுக நிச்சயமாக முன்புபோல் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இருக்கும் என்று ஓபிஎஸ் அவர்கள் என்னுடன் தான் இருக்கிறார் என்றும் அவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பார்த்ததில் எந்த எந்த தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
எடப்பாடி பழனிச்சாமி இடம் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை என்றும் கூறினார் 
 
மேலும் நேரம் வரும்போது கட்சி அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு கண்டிப்பாக செல்வேன் என்றும் அதிமுக தலைமையை நான் ஏற்க வேண்டும் என்பதே தொண்டர்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்