சசிகலா குடும்பத்தில் தினகரனுக்கும், திவாகரனுக்கு இடையே பணிப்போர் நிலவி வருவது அரசியல் வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே. இந்த பணிப்போர் நாளுக்கு நாள் வளர அது அதிமுகவை பல துண்டுகளாக சிதறடித்து வருகிறது.
இந்நிலையில் குடும்பத்துக்குள் அடித்துக்கொள்வதால் அரசியலில் ஏற்படும் இழப்புகள் குறித்து சசிகலா தனது குடும்பத்தினருக்கு சிறையில் இருந்தவாறு கடிதம் எழுதி அவர்களை சமாதானம் செய்ததாக தகவல்கள் வருகிறது.
தினகரன் ஒரு பக்கம் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை வைத்து தனியாக செயல்பட்டு வருகிறார். இன்னொரு பக்கம் தினகரனை ஒதுக்கி வைக்க அவருக்கு எதிராக தனது ஆதரவு அமைச்சர்கள் மூலம் காய் நகர்த்துகிறார் திவாகரன்.
இப்படி குடும்ப உறுப்பினர்கள் மறைமுகமாக அடித்துக்கொள்வதை சிறையில் இருந்தே கவனித்து வந்த சசிகலா, நமக்குள் சண்டை வேண்டாம். நாம் சண்டை போட்டால் பாஜகவுக்கும், எடப்பாடிக்கும் தான் லாபம். எனவே சண்டையை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என சிறையில் இருந்தவாறே கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.