போயஸ் கார்டன் வீட்டிற்கு ஆப்பு: சசிகலாவுக்கு அடுத்து சிக்கல்!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (13:26 IST)
சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துகளை முடக்கியது வருமான வரித்துறை.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் டிடிவி தினகரனின் உறவினருமான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது பெங்களூர் அக்ரகார சிறையில் கைதியாக உள்ளார். சமீபத்தில் சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.  
 
இந்நிலையில் பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் இன்று சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீஸை ஒட்டியது வருமான வரித்துறை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்